பிரம்ம தீர்த்தத்தில் சிதம்பரம் நடராஜர் சுவாமி தீர்த்தவாரி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2014 09:04
சிதம்பரம்; சிங்காரத்தோப்பு பிரம்ம தீர்த்தத்தில் நடராஜர் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.சிதம்பரம் நடராஜர் சுவாமிக்கு ஏற்ற தச தீர்த்தங்களில் ஒன்று பைபாஸ் ரோட்டில் உள்ள சிங்காரத்தோப்பு என்கிற திருக்களாஞ்சேரி பிரம்மபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளம். இந்த குளத்தில் தேவர்கள் ஸ்நானம் செய்து பிரம்மபுரீஸ்வரரை வழிப்பட்ட சிறப்புமிக்க குளம். இந்த தீர்த்த குளத்தில் பங்குனி மாதம் வளர்பிறை பிரதமையன்று நடராஜர் சுவாமி (சந்திரசேகரர்) ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். தீர்த்த குளம் கரையில் அஸ்தரராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜர் சுவாமிக்கு பிரம்ம தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.இதனைதொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தவாரி உற்சவத்தை பொதுதீட்சிதர்கள் செய்தனர்.