மேலுார் : மேலுார் அருகே அம்மன் கோவில்பட்டி வீரகாளியம்மன் கோயில், பங்குனி திருவிழாவில் கீழவளவு, அடைஞ்சான், இடைஞ்சான் கண்மாய்பட்டி, சக்கரைபீர் மலைப்பட்டி, வச்சாம்பட்டி கிராம பொதுமக்கள், கடும் விரதம் இருந்து நேற்றிரவு பூக்குழி இறங்கினர். இத்திருவிழாவால், நோயின்றி, மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.