சிங்கம்புணரி : பிரான்மலை சங்கர விநாயகர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்மலையில் மழையின்றி மலையில் உள்ள மரம் செடி,கொடிகள் கருகி விட்டது. ஊற்றுக்கள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க மழைவேண்டி சங்கர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.