பதிவு செய்த நாள்
02
ஏப்
2014 
02:04
 
 விருதுநகர்: விருதுநகர் மீனம்பட்டி அன்னை தெரசா ஆலயத்தில், ஏப்., 6 ல் ஆன்மிக தவக்கால வழிபாடு நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள, புனித இன்னாசியர் ஆலய பாதிரியார் எஸ். ஞானபிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், தவக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட முக்கிய ஆலயங்களுக்கு, திருயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்., 6 ல், மீனம்பட்டி அன்னை தெரசா ஆலயத்தில், தவக்கால வழிபாடுகள் நடக்கிறது. இதில் நான், பாதிரியார்கள் எஸ்.அருள்ராயன், கருங்குளம் அலெக்ஸ் செல்லையா, வட்டார குருக்கள் முன்னிலையில் துதி ஆராதனை,  இறை செய்தி, ஒப்பரவு வழிபாடு, சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவை பாதை நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார்கள் பலர் கலந்து கொள்கின்றனர், என்றார்.