திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 9--ம் தேதி முதல் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்தார். சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் வருகிற 6--ம் தேதி கொடியேற்றப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15--ம் தேதி காலை 10.31 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கிறார்கள்.