விழுப்புரம்: கொண்டங்கியில் கும்பாபிஷேகம் நடந்த விநாயகர், சன்னியம்மன், துர்காதேவி, அங்காள பரமேஸ்வரி, மாரியம்மன் மற்றும் அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட விநாயகர், சன்னியம்மன், துர்க்கா தேவி, அங்காளபரமேஸ்வரி, மாரியம்மன் மற்றும் அய்யப்பன் கோவில்களில் கடந்த மாதம் 12ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டல பூஜைகள் நிறைவு விழா நடந்தது. இதில் 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. இதன் பின் மூலவர்களுக்கு தீர்த்தம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.