ஈரோடு : ஈரோடு சின்ன மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா , பொங்கல் விழாவும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்தனர். சில பக்தர்கள் பறவைக் காவடியில் வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சனிக்கிழமை கம்பம் பிடுங்குதலும், மஞ்சள் நீர் விழாவும் நடைபெறும்.