கிருஷ்ணகிரி , போச்சம்பள்ளி அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2014 12:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மருதேரியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அரியக்கா, பெரியக்கா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது. விழாவில், மத்தூர், போச்சம்பள்ளி, எட்டிபட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் என சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.