ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2014 10:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில், 74ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. காவடி, பூக்குழி இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.விழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் காலை சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வளாக கதிர்காம சக்திவடிவேல் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.3ல் துவங்கியது. ஏப்.13 காலை பக்தர்கள், பால்குடம் எடுத்தும், காவடிகள் சுமந்து ஊர்வலமாக கோயிலை அடைகின்றனர். ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்துஉள்ளனர்.