இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா நடக்கிறது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் குதிரை, காமதேனு, சிம்மம், அன்னம் வாகனங்களில் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று காலை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.