பதிவு செய்த நாள்
05
ஏப்
2014
10:04
பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிங்கம் வரைந்த கொடி, கம்பத்தில் ஏறும் போது பக்தர்கள் ஆரோகரா நாமத்தை ஒலித்தனர். ராஜகோபுரம் கட்டும் பணி நடக்கும் போது, தேர்த்திருவிழா நடைபெறுவது விசேஷமாகும். நூற்றாண்டுகளில், முதன் முதலாக வரலாற்று பதிவாகும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். இதனால் ஊர் மக்களுக்கு சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிழாவை முன்னிட்டு, முருகன் வள்ளி, தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, நந்தி உட்பட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவர்கள் வீதி உலா நடக்கும். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், முக்கிய திருவிழாவான ஏப்.12ல் தேரோட்டம் நடக்கிறது. செயல்அலுவலர் சுதா தலைமை வகித்தார். திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், உறுப்பினர் பி.சி.சிதம்பரசூரியவேலு, ஸ்தபதி ராஜசேகரன், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.