குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சகிளும் நடந்தன. இன்று திருப்பூச்சாற்று, மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம், நாளை கரக ஊர்வலம் ஆகியன நடக்கின்றன. நாளை மறுநாள் (7-ம் தேதி) தொடங்கி மே, 9-ம் தேதி வரை தினமும் உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், ஆராதனை , தேர் ஊர்வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக பூக்குண்டம் வரும் 13-ம் தேதி நடக்கிறது. தொடர்ச்சியாக வரும் 15-ம் தேதி தேர் வடம் பிடிக்கப்படுகிறது.