பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
10:04
சேலம்: துறையூரில் அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சேலம் கிளை சார்பில், சேலத்தில், நேற்று பருவமழை வேண்டி, 3,008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. சேலம் கிளை பொறுப்பாளர் பாலாஜி கூறுகையில்,""துறையூரில் செயல்படும் அகத்தியர் சன்மார்க்க சங்கம், கடந்த, 37 ஆண்டுகளாக மக்களுக்காக, பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. கடந்தாண்டு பருவமழை தவறியது. இந்தாண்டு இதுவரை மழை பெய்யவில்லை. நீர் நிலைகள் வறண்டு விட்டன. உலக அமைதி வேண்டியும், பருவ மழை வேண்டியும், 3,008 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் சேர்ந்து, இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபடும் போது மழை வர வாய்ப்புள்ளது, என்றார்.