பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
10:04
பழநி: பழநியில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் ஐந்து நாட்கள் தங்கத் தேரோட்டம் நிறுத்தப் படவுள்ளது. பழநி பங்குனி உத்திரவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்.16 வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, முத்துக் குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், வெள்ளி ஆட்டுகிடா, காமதேனு, சப்பரம், தங்கமயில் வாகனத்தில், சன்னதிவீதி, கிரிவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பங்குனி உத்திரவிழாவிற்காக, பால்குடம், காவடியுடன் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், மலைக்கோயிலில் ஏப்.,11 முதல் ஏப்.,15 வரை, தங்கத்தேரோட்டம் நிறுத்தப்படவுள்ளது. விழாவையொட்டி, அடிவாரம் குடமுழுக்கு நினைவு அரங்கில், நாள்தோறும் நாதஸ்வர மங்கள இன்னிசை, பக்திசொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.