கடலூர்: கடலூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் நாளை துவங்குகிறது. கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி உற்சவம் நாளை (8-ம் தேதி) துவங்குகிறது. ராமர்ஜனம், சீத்தாகல்யாணம், வாலிவாதம் , சுந்தர காண்டம், ராமர் பட்டாபிஷேகம், ஜடாயு மோட்சம் ஆகியவை தொடர்ந்து நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.