பதிவு செய்த நாள்
08
ஏப்
2014
10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோயில் பங்குனி திருக்கல்யாண விழாவில், நேற்று தங்கபரங்கி நாற்காலியில் ஆண்டாள் மற்றும் அனுமந்த வாகனத்தில் ரெங்கமன்னார் அருள்பாலித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள், ரெங்க மன்னார் தேரில் எழுந்தருளுதலும், தொடர்ந்து தேரோட்டமும், ஏப்.,13 ல் நடக்கிறது. அதன்பின், கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 17 ல் குறடில் புஷ்பயாகம் நடக்கிறது.