பரமத்தி வேலூர் பால தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2014 01:04
பரமத்தி வேலூர் ; வேலூர் வட்டம், பாலப்பட்டி கதிர்மலை பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கடந்த திங்களன்று நடைபெற்றது. வரும் 12-ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறும். 13-ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெறும். பின்னர் தீர்த்த அபிஷேகமும், 2 மணிக்கு மகேஸ்வர பூஜையும், இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும். 14-ம் தேதி காலை பொங்கல் மாவிளக்கு பூஜையும், மாலை சுவாமி வீதி உலாவும் , 15-ம் தேதி மாலை அன்னை சீதை காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கிறது.