பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
01:04
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராமர் கோவில் ராமநவமியை முன்னிட்டு நேற்றுக்காலை, 10 மணிக்கு ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திருமஞ்சன நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது. மதியம், 1 மணியளவில், 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு ஸ்ரீ ராமர், சீதை, லட்சமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதற்கான ஏற்பாட்டை ஸ்ரீராமநாம வழிபாட்டு சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.