பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஏப்., 13ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. பச்சைமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கிராமசாந்தி, கொடியேற்றம், யாகசாலை பூஜை, தேர்வீதி வலம் வருதல், மகா தீபாராதனை நடந்தது. இன்று முதல் ஏப்., 11ம் தேதி வரை, காலை ஒன்பது மணி, மாலை, நான்கு மணிக்கும் யாகசாலை பூஜையும், வாகனத்தில் ஸ்வாமி தேர்வீதி வலம் வருதல் நடக்கிறது. 12ம் தேதி காலை, எட்டு மணிக்கு யாகசாலை பூஜை, சண்முகருக்கு சகப்பு சாத்தி, காலை, பத்து மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 13ம் தேதி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை, ஏழு மணிக்கு மகன்யாச அபிஷேகம், காலை, எட்டு மணிக்கு பச்சை சாத்தி, மாலை, நான்கு மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.