அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் காலையில் ராம பக்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சீதா, ராமபிரான் பட்டாபிஷேக உருவப்படம் வீதியுலா நடந்தது. அன்னதானம், சிறப்பு அலங்காரம் , தீபாராதனை நடந்தது. கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. மாலையில் வீதியுலா புறப்பாடு நடந்தது. 9ம் தேதியும் வழிபாடு நடக்கிறது. 10 ம்தேதி சிறப்பு அபிஷேகத்துடன் ராமநவமி நிறைவு பெறுகிறது. நொச்சலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சீதா தேவி, ராமர், லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் சுவாமி உள் புறப்பாடு நடந்தது.