உடுமலை: ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, தில்லை நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீஆனந்த சாய்பாபா கோவிலில் ராமநவமி விழா கடந்த மாதம் மார்ச் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் கரகட ஆரத்தி, அபிஷேகம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ராமநாம சங்கீர்த்தனம், சாய்சத்சரிதம் பாராயணம் உள்ளிட்டவை நடந்தன. ராமநவமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கோவிலில் உள்ள புதிய உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம்,சிறப்பு ஆராதனையும், மதியம் அன்னதானமும், இரவு 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர்.