பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
12:04
தளவாய்புரம் : கொம்மந்தாபுரம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இரண்டாம் நாளன்று இரவில், அக்னிசட்டி எடுத்து,அம்மன் வீதி உலா நடந்தது.மூன்றாம் நாளை முன்னிட்டு, மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3மணிக்கு, பூ இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடை, உறவின்முறை தலைவர் செல்லத்துரை, நாட்டாமை ராஜபாண்டியன்,செயலாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். *முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில், பூக்குழி திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள், பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி,அம்மன் வீதி உலா நடந்தது.இரண்டாம் நாள் மாலையில், காப்பு கட்டிய பக்தர்கள், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அக்னி சட்டிக்கு பின்னால், பெண்கள் முளைப்பாரி,பூ பெட்டி எடுத்து வந்து,நேர்த்திக்கடன் செலுத்தினர்.மூன்றாம்நாள் மாலை, காப்பு கட்டிய பக்தர்கள், பூ இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. ஏற்பாடை, உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர். இதே போல், தளவாய்புரம் பத்திரகாளியம்மன் கோயில், செட்டியார்பட்டி ஆறு சமுகத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில், முத்துச்சாமியாபுரம் மாரியம்மன் கோயில், தேவேந்திர சமுகத்தினருக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலிலும், பங்குனி பொங்கல் திருவிழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.