விழுப்புரம்: வளவனூர் குமாரபுரி ஊரல் குட்டை வீதியில் அமைந்துள்ள அமராவதி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 9:00 மணிக்கு நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பரிசாஹூதி, 10:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து, 10:15 மணிக்கு கும்ப மூர்த்தி புறப்பாடு, 10:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:45 மணிக்கு அமராவதி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 11:30க்கு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.