வீரட்டானேஸ்வரர் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 11:04
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நாளை (13ம் தேதி) பங்குனி உத்திரத்தையொட்டி, அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், உற்சவர் அம்பாள் பெரியநாயகி திருகல்யாண உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருகல்யாண வைபவ கைங்கர்ய குழுவினர் செய்து வருகின்றனர்.