பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
திருத்தணி: உச்சி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாளை காலை, 8:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருத்தணி ஸ்டாலின் நகரில் அமைந்துள்ளது, உச்சி பிள்ளையார் கோவில். நேற்று காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு கும்பாலங்காரம், முதல் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு விசேஷ சந்தியும், நாளை (13ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, கோபுர விமானம் மற்றும் நவக்கிரக சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறும். காலை, 8:30 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்