அன்னுார் : குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நாளை (13ம் தேதி) நடக்கிறது. வட்டமலை ஆண்டவர் கோவிலில் உள்ள வற்றாத சுனை தீர்த்தம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆறாம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த் திருவிழா, ஏப்., 8ல் கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது.வரும் 12ம் தேதி மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் உலாவும் நடக்கிறது. 13ம் தேதி அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 10.00 மணிக்கு காவடிக்குழு மற்றும் ஜமாப் குழுவுடன் தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் வடம்பிடித்து துவக்கி வைக்கின்றனர்.