அன்னூர்: அன்னூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு துவங்கியது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு ராமநவமி விழாவை முன்னிட்டு ஸ்ரீராமானூஜ பக்த பேரவை சார்பில், கம்பராமாயண தொடர் சொற்பொழிவு துவங்கியது. புலவர் ராமசாமி, திரு அவதாரம் என்னும்தலைப்பில் சொற்பொழிவை துவக்கினார். 16-ம் ÷தி வரை தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை கம்ப ராமாயண சொற்பொழிவு நடக்கிறது. 17-ம் தேதி காலை 10:00 மணிக்கு நிறைவு சொற்பொழிவு நடக்கிறது. மாலையில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதியுலா நடக்கிறது.