தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் அகல் விளக்கு சிறப்பு பூஜை நடந்தது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தி ஸ்வாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.