பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
12:04
ஆர்.கே.பேட்டை: பொன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், சித்திரை பவுர்ணமி உற்சவம் நடந்தது. நிலவு ஒளியில், அம்மன் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்ரா பவுர்ணமி இம்மாத இறுதியில் வருகிறது. இருப்பினும், நேற்று முன்தினம் சித்திரை ௧ல், புத்தாண்டு தினத்தில், கோவில்களில் பவுர்ணமி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆர்.கே.பேட்டை, பொன்னியம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை பூவராக சுவாமி கோவில், அத்திமாஞ்சேரி பேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், நாகபூண்டி நாகேஸ்வர சுவாமி உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமி உற்சவம் சிறப்பாக நடந்தது. அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர் பேட்டை வள்ளலார் ஜோதி மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை பொன்னியம்மன் கோவிலில் புத்தாண்டை ஒட்டி, வேப்பம்பூ, வெல்லம் கலந்த பானகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் அம்மன், கோவில் வளாகத்தில் எழுந்தருளினார்.