ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த சுவாமியின் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை, தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் அமைந்துள்ளது, சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில், நேற்று முன்தினம், மூன்றாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.