கூடலூர்,: கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோயில் சிவன் மலையில் கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது.பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலம், மாலை 5 மணிக்கு மலை அடிவாரத்திலுள்ள வேட்டைக்கொருமகன் கோயில் வளாகத்தில் புறப்பட்டு, சுமார் 6 கி.மீ. தூரம் நடந்தபிறகு மலை உச்சியில் அமைந்துள்ள சிவலங்கத்திற்கு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.அதைத் தொடர்ந்து உலக நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.கிரிவலம் சென்றுவர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.