திருவண்ணாமலை : பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவத்தையடுத்து, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் 2 நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் (ஏப். 13) நடைபெற்றது. அன்றைய தினம் காலை 11.45 மணி முதல் 1.45 மணிக்குள் சுவாமி கருவறையில் மூலவர் அருணாசலேஸ்வரர்உண்ணாமுலையம்மன் திருக்கல்யாண உற்ஸவமும், இரவு 11 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்ஸவர் திருக்கல்யாண உற்ஸவமும் சிறப்பாக நடைபெற்றது. 2 நாள் ஊஞ்சல் உற்ஸவம்: தொடர்ந்து, புதன், வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறுகிறது.