வலங்கைமான்: வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் சூரிய பூஜை நடைபெற்றது. இக்கோவிலில் ஆவணி மாதம் கடைசி ஞாயிறன்று நடைபெறும் தெப்பத்திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. சித்திரை 1--ம் தேதி கருவறை யில் உள்ள அம்மனின் முகத்தில் சூரிய கதிர்கள் பதிவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நேற்று முன்தினம் சித்திரை முதல்நாளையொட்டி அதி காலை 5லீ மணியளவில் சூரிய உதயத்தின்போது அம்மனுக்கு சூரியபூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிசேகங்கள், பால்அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு அலங்காரங்களுடன் மகா ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத் தில் அம்மன் பல்வேறு அலங்காரங்களுடன் வீதியுலா உற்சவம் முக்கிய வீதிகளில் நடை பெற்றது.இந்த சூரிய பூஜைவிழா வருகிற 18-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.