Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை தேர்த்திருவிழா இன்று நிறைவு ஜென்மராக்கினி ஆலயத்தில் சிலுவை பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2014
12:04

உடுமலை : உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பழமை வாய்ந்த கோவிலை புதுப்பிக்க பூமி பூஜை நேற்று நடந்தது. உடுமலை பெதப்பம்பட்டியில், பழமை வாய்ந்த தண்டபாணி, பகவதியம்மன் கோவில் உள்ளது. செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், முட்புதர்கள் மண்டிக்கிடந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கட்டடங்கள் பழுதடைந்து, சாமி சிலைகள் மட்டுமே மிஞ்சின. இச்சிலைகளை பராமரித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், கோவில் அமைந்திருந்த நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சித்தனர். இது குறித்து கோவில் அறக்கட்டளையினர் சார்பில், திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு போலீசில் புகார் செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டது. இதனையடுத்து, சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க அப்பகுதி மக்கள் முன்வந்தனர். இதனையடுத்து, கோவில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி (பஜனை கோவில்), பகவதியம்மன், ரேணுகாதேவி ஆகிய சன்னதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. கோவில் கட்டுமான பணிகளை துவக்கும் வகையில், நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, திருமூர்த்திமலையிருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தம் செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பழமையான கோவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட உள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாளான இன்று, ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம் இன்று சனிக்கிழமை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் நவ. 24ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பழைய தாமிர கொப்பரை ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar