புதுச்சேரி: புனித வெள்ளியையொட்டி, ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் இருந்து சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இயேசு உயிர் நீத்த நாளில், அவரது நினைவாக சிலுவை பாதை நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, நேற்று காலை மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் இருந்து பேராயர் ஆனந்தராயர் தலைமையில் சிலுவைபாதை நிகழ்ச்சி நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.