சிதம்பரம் : காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடைபெற்றது. காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள திருநாரையூரில் உள்ள ஸ்ரீசவுந்தர்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. காலை, மாலை அபிஷேக ஆராதனைகளும், 6 கால பூஜையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.