புதுச்சேரி : கிருஷ்ணா நகர் சின்மய மிஷனில், பவகத்கீதை சொற்பொழிவு நேற்று நடந்தது. கிருஷ்ணா நகர் சின்மய மிஷனில், ஒவ்வொரு மாதமும், 3வது வாரத்தில் 4 நாட்கள் பகவத்கீதை சொற்பொழிவு நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான, சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், புதுச்சேரி சின்மய மிஷன் ஆச்சார்யா சுருதி சைதன்யா பங்கேற்று, பகவத்கீதையின் 12ம் அத்தியாயத்தில் உள்ள பக்தியோகம் குறித்து சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சின்மய மிஷன் புதுச்சேரி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.