ஊட்டி : ஊட்டி காந்தல் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேக பூர்த்தி விழா நடக்கிறது.காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், மகாயாகம், பூர்ணாகுதி மற்றும் அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மடாதிபதி மருதாசல அடிகளார், தட்சிணாமூர்த்தி திருமடாலயம் அறங்காவலர்கள், காசிவிஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கம் மற்றும் முன்னேற்ற சங்கத்தினர் செய்துள்ளனர்.