Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... பூலோகநாத ஸ்வாமி கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி குகநாதீஸ்வர் கோயிலில் திருக்கல்யாணவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
11:04

நார்கோவில் : கன்னியாகுமரி ரயில்நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 11-வது வருஷாபிஷேக விழா மற்றும் ஸ்ரீகுகநாதீஸ்வரர்-ஸ்ரீபார்வதியம்மாள் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கலசபூஜை. 7 மணிக்கு கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோயிலுக்கு பார்வதியம்மாள் தவசுக்கு எழுந்தருளல், காலை 9 மணிக்கு வருஷாபிஷேகம், அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாரதனை, மதியம் அன்னதானம், மாலை 4 மணிக்கு சுவாமிரிஷப வாகனத்தில் எழுந்தருளி பெண் அøழ்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீகுகநாதீஸ்வரர்-ஸ்ரீ பார்வதியம்மாள் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்க கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து சீர்வரிசையுடன் குகநாதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு குகநாதீஸ்வரர் கோயிலின் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ பார்வதியம்மாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருமாங்கல்யதாரண்ய முகூர்த்தம் நடத்தி மாலை மாற்றி காட்சி கொடுத்து திருமாங்கல்யம் பூணும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமியும் அம்பாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகரும், குதிரை வாகனத்தில் பெருமாளும், சப்பர வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து பள்ளியறை பூஜை நடந்தது. பின்னர் திருக்கல்யாண பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குகநாதீஸ்வரர் கோயில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, கிருஷ்ணபிள்ளை உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar