நொய்யல்; கரூர் மாவட்டம் புன்னம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவினையொட்டி அம்மனுக்கு பூசாட்டுதல் , அக்னிச்சட்டி எடுத்து கோவில் வளாகத்தை சுற்றிவரும் நிகழ்ச்சி , வடிசோறு நிகழ்ச்சி, உற்சவ மூர்த்தி குதிரை வாகனத்தில் ஏறி திருவீதி உலா வரும்நிகழ்ச்சியும் நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.பின்னர் 1 மணி அளவில் நிலைக்கு வந்தது. அதன் பின்னர் உற்சவ மூர்த்தி வண்டிகால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை ஏராளமான பெண்கள் பொங்கல் வைத் தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு பூஜைகள் செய்தும் வழி பட்டனர்.