கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலிலுள்ள காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து, டிப்போ பகுதி, செவன் ரோடு, கே.சி.எஸ். திடல், ஆனந்தகிரி, அண்ணா நகர், மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், காளியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.