உடன்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பூஜை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை பூஜை திருவிழா வருகிற 30–ந்தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்குகிறது.தொடர்ந்து 7 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.மே மாதம் 1–ம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் , இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 10 மணிக்கு மேக்கட்டி கட்டுதல், மேக்கட்டி பூஜை ஆகியன நடக்கிறது.