வனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2014 02:04
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தீவனூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த புராதன கற்கோவிலில் பெருமாளுக்கு மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து பெருமாள் வெள்ளிகவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு தீபாராதனை முடிந்து,கல் ஸ்தூபியில் தீபம் ஏற்றப்பட்டது.