தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2014 02:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தஞ்சை பெரிய கோவிலில் காலை திருக்கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கோவில் முன் உள்ள பெரிய கொடிமரத்தில் சிவச்சாரியார்கள் கொடியேற்றினர். கொடியேற்றத்தின் போது பெரியநாயகி சமேத பெருவுடையார் அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சந்திரசேகரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி உலா வந்தனர். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், பெரியநாயகி சமேத பெருவுடையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் காலை பல்லக்கில் சுவாமி உலா நடைபெறுகிறது.