கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் வைபவமும், பெருமாள் தாயாருக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை @காவிந்தராஜ பெருமாள் @காவிலில் நேற்று காலை ஆண்டாள் உற்சவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து கலச ஆவாகனம் செய்து பூஜைகள், யாகம் நடத்தினர். மூலவர் ஆண்டாளுக்கு தங்கக் கவசம் சாற்றி பூஜைகள் செய்தனர். மாலையில் பெருமாள் தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, எழுந்தருளச் செய்தனர். விஸ்வக்சேனர் வழிபாடு, புன்னியாவதனம், அங்குரார்பனம், காப்புக்கட்டுதல், மாலை மாற்றுதல் பூஜைகள் செய்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள் தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் குழுவினர் வழிபாட்டினை நடத்தி வைத்தனர்.