பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
12:04
குளித்தலை: தோகைமலை அருகேயுள்ள பாம்பாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், தோகைமலை அருகே டி.மேலபட்டியில் உள்ள பாம்பலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில், 22ம் தேதி கரகம் பாலிக்கப்பட்டு வீதி உலா வந்து பாம்பலம்மன் குடிபுகும் நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி அலகு குத்துதல், கிடா வெட்டுதல், தீச்சட்டி, பால்குடம், எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல், மாவிளக்கு வைத்து, 5,000க்கும் மேற்பட்ட சேவல்கள் நேர்த்திகடனாக பலியிடப்பட்டன. அன்று இரவு, அம்மனுக்கு முத்து பல்லக்கு, குதிரை வாகனம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. திருவிழாவில் தளிஞ்சி, நெய்தலூர் வடசேரி, ஆர்டி.மலை, சேப்ளாபட்டி, முதலைப்பட்டி, கள்ளை, ஆலத்தூர், கூடலூர், புத்தூர், கல்லடை, நங்கவரம், தோகைமலை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.