செஞ்சி : செஞ்சி அருகே அவலூர்பேட்டை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு குருபூஜை நேற்று நடைபெற்றது. நாயன்மார்களுள் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசருக்கு சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தையொட்டி குருபூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் இரவு 7 மணிக்கு அலங்காரமும் மஹாதீப ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.