பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
12:04
சேலம்: சேலம், சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சேலம், அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை, 7.30 மணிக்கு கோவிலில், பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. நேற்று மாலை, தீப அலங்காரத்துடன் பெருமாள், ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா சென்றார். இன்று காலை, 8 மணிக்கு சிறிய திருவடி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மே, 5ம் தேதி வரைதினமும் இரவு, 8 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. மே 6ம் தேதி காலை, 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி, எம்பெருமாளின் பிரம்மோற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.