பதிவு செய்த நாள்
30
ஏப்
2014
12:04
மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 407 மண்டகப்படியில் கள்ளழகர் தலா 3 நிமிடங்கள் மட்டுமே இருப்பார். அதற்குள், பரிவட்டம் முதலிய பிரசாதங்களை பெற்று கொள்ள வேண்டும், என மண்டகப்படிதாரர்களை அழகர்கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது: சித்திரை திருவிழாவை முன்னிட்டு 407 மண்டகப்படிகளில் பெருமாள் எழுந்தருளுகிறார். எனவே, பெருமாள் மண்டகப்படியில் எழுந்தருளியவுடன் நைவேத்தியங்களை தயாராக வைத்து, பரிவட்டம் முதலிய பிரசாதங்களை மண்டகப்படிதாரர்கள் பெற்று கொள்ள வேண்டும். இவற்றை 3 நிமிடத்திற்குள் செய்து கொள்ள தவறினால், பெருமாளை அடுத்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும்.பெருமாளுக்கு சாத்தப்படும் பரிவட்டம், அசல் பட்டு பரிவட்டம் தவிர போலிப்பட்டு சாத்தப்படமாட்டாது. மண்டகப்படிதாரர்கள் பெருமாள் எழுந்தருளுவதற்கு தகுந்தபடி பந்தல்களை உயரமாகவும், அகலமாகவும், விளக்குகள், வாழை மரம் தோரணங்கள், ஒலிபெருக்கி, மின் ஒயர்கள் வாகனங்களில் தட்டாமலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். இல்லையேல், பெருமாளை அடுத்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும், என்றார்.