திட்டக்குடி : திட்டக்குடியில் சிறுதொண்ட நாயனார் பக்தர்கள் நடத்திய அன்னப் படையல் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திட்டக்குடி வரசித்தி விநாயகர் கோவிலில் சிறுதொண்ட நாயனார் பக்தர்கள் சார்பில் அன்னப்படையல் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காலை சிறுதொண்ட நாயனார், சீராளன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து சென்று பொதுமக்களிடம் அரிசி, காய்கறிகள் காணிக்கையாக பெறப்பட்டு அன்னப்படையல் தயார் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தனர். இதனையடுத்து கோவிலில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.